சைவம்

Muttaikose Vadai Recipe In Tamil | Cabbage Vada Recipe : சுவையான… முட்டைக்கோஸ் வடை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Cabbage Vada Recipe : சுவையான… முட்டைக்கோஸ் வடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது வடை சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறதா? அதுவும்

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* நறுக்கிய முட்டைக்கோஸ் – 1 கப்

* கறிவேப்பிலை – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – சிறிது

* இஞ்சி – 1/2 இன்ச் துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு மற்றும் நீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் குறைந்தது 3/4 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். (அதிக நீரை சேர்த்துவிட வேண்டாம்)

* மாவு நல்ல பதத்தில் உள்ளதா என்பதை கண்டறிய நீரில் அரைத்த மாவை சிறிது போடும் போது, அது மிதந்தவாறு இருந்தால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம்.

* பின்னர் அரைத்த மாவை ஒரு பௌலில் எடுத்து, அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, துருவிய இஞ்சி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் போட்டு எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.

Image Courtesy: chitrasfoodbook

இந்த பதிவின் மூலமாக Cabbage Vada Recipe : சுவையான… முட்டைக்கோஸ் வடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Cabbage Vada Recipe : சுவையான… முட்டைக்கோஸ் வடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment