சைவம்

Paneer Gulab Jamun Recipe Tamil | பன்னீர் குலாப் ஜாமூன் ரெசிப்பி

paneer gulab jamun
Written by admin

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் குலாப் ஜாமூன் (Paneer Gulab Jamun) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அனைவருக்குமே குலாப் ஜாமூன் என்றால் வாயில் எச்சில் ஊறும். இது பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். குலாப் ஜாமூனை பலவாறு சமைப்பார்கள். அதில் பிரட் ஜாமூன், பால் பவுடர் ஜாமூன், மலாய் குலாப் ஜாமூன், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஜாமூன், பன்னீர் குலாப் ஜாமூன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்போது நாம் இவற்றில் பன்னீர் குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று காணப் போகிறோம்.

பன்னீர் உடலுக்கு மிகவும் நல்லது. பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான புரோட்டீன் கிடைக்கும். பன்னீர் குலாப் ஜாமூன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செய்ய ஏற்றது.

இப்போது பன்னீர் குலாம் ஜாமூனின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 1 கப் (உதிர்த்தது)

* மைதா – 3 டேபிள் ஸ்பூன்

* பேக்கிங் சோடா/சமையல் சோடா – 1 சிட்டிகை

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை சிரப் செய்வதற்கு…

* சர்க்கரை – 1 கப்

* தண்ணீர் – 1 கப்

* குங்குமப்பூ – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் சர்க்கரையைப் போட்டு அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை கலவை ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் குங்குமப்பூவை சேர்த்து கலந்து இறக்கி, மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு உதிர்த்து வைத்துள்ள பன்னீரை நன்கு கையால் மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் மைதா மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, வெதுவெதுப்பான சர்க்கரை சிரப்பில் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்தால், சுவையான பன்னீர் குலாம் ஜாமூன் தயார்….

இந்த பதிவின் மூலமாக பன்னீர் குலாப் ஜாமூன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் குலாப் ஜாமூன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment