சைவம்

Red Velvet Hot Chocolate Recipe | ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் ஒரு அற்புதமான மற்றும் சுவையான பானம். நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தால், உங்கள் துணையை அசத்தும் வகையில் ஒரு ஸ்பெஷலான ரெசிபி செய்ய நினைத்தால், அதற்கு ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் சரியாக இருக்கும். இது ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ரெசிபி. இந்த பானத்தை டீ, காபிக்கு பதிலாக குடிக்கலாம். அதுவும் மாலை வேளையில் உங்கள் துணை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வரும் போது, இதை செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

இப்போது ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பால் – 1 கப்

* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

* கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

* கொக்கோ சிப்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

* வென்னிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்

* ஃபுட் கலர் – சில துளிகள்

* மார்ஷ்மெல்லோ – சிறிது

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு பாத்திரம்/பேனில் பாலை ஊற்றி, அதில் கொக்கோ பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பின்பு அத்துடன் சர்க்கரை மற்றும் கொக்கோ சிப்ஸ் சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

* பின் அதில் வென்னிலா எசன்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இறுதியில் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் சில மார்ஷ்மெல்லோ சேர்த்து பரிமாறினால், சுவையான ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரெட் வெல்வெட் ஹாட் சாக்லேட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment