சைவம்

Schezwan Dosa Recipe | சுவையான… சீசுவான் தோசை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… சீசுவான் தோசை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பொதுவாக நாம் கடைகளில் சீசுவான் ஃப்ரைடு ரைஸ் வாங்கி சாப்பிட்டிருப்போம். இது சைனீஸ் ரெசிபிக்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றும் கூட. இந்த ஃப்ரைடு ரைஸ் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் சீசுவான் சாஸ் தான். ஆனால் இந்த சீசுவான் சாஸ் கொண்டு ஒரு அற்புதமான தோசை செய்யலாம் என்பது தெரியுமா? அதன் பெயர் தான் சீசுவான் தோசை.

இந்த தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் ருசியாக இருக்கும். குறிப்பாக இது காலையில் மட்டுமின்றி, இரவு நேரத்திலும் சாப்பிட ஏற்றது. இப்போது சீசுவான் தோசையை எப்படி செய்வதென்பதைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* தோசை மாவு – 2 கப்

* வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

* கேரட் – 1/4 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

* குடைமிளகாய் – 1/4 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

* முட்டைக்கோஸ் – 1/2 கப் (நீளமாக நறுக்கிக் கொள்ளவும்)

* பூண்டு – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* ஸ்பிரிங் ஆனியன் – 2 டேபிள் ஸ்பூன் (பச்சை பகுதி)

* ஸ்பிரிங் ஆனியன் – 2 ஸ்பூன் (வெள்ளைப் பகுதி)

* சீசுவான் சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்

* வெண்ணெய் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி மற்றும் பூண்டுகளை சேர்த்து வதக்கவும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதைத் தொடர்ந்து கேரட் மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து, அது சுருங்கி, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

* அதன் பின் 2 டீஸ்பூன் சீசுவான் சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும்.

* இறுதியில் ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

* இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் தோசை மாவு கொண்டு தோசை ஊற்றவும்.

* பின் அதன் மேல் சிறிது வெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் சீசுவான் சாஸ் வைத்து, ஒரு ஸ்பூன் கொண்டு மேலே பரப்பி விட வேண்டும்.

* தோசையானது வெந்ததும், அதன் ஒரு ஓரத்தில் சிறிது வதக்கிய காய்கறிகளை வைத்து ரோல் போன்று சுருட்டினால், சுவையான சீசுவான் தோசை தயார்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக சுவையான… சீசுவான் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… சீசுவான் தோசை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment