சைவம்

Pumpkin Poriyal Recipe | சுவையான.. பூசணிக்காய் பொரியல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான.. பூசணிக்காய் பொரியல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் மஞ்சள் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். மஞ்சள் பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்.

குறிப்பாக மஞ்சள் பூசணியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை தாமதப்படுத்தி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால் உடல் எடையைக் குறைப்போருக்கு மிகச்சிறப்பான காய்கறி.

MOST READ:
ருசியான…. வாழைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள்:

* மஞ்சள் பூசணிக்காய் – 1 கப் (நறுக்கியது)

* வெங்காயம் – 1

* பச்சை மிளகாய் – 3

* துருவிய தேங்காய் – சிறிது

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* உப்பு – தேவையான அளவு

* கறிவேப்பிலை – சிறிது

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – சிறிது

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

* பின் அதில் பச்சை மிளகாயை கீறிப் போட்டு வெள்ளையாகும் வரை வதக்க வேண்டும்.

* அதன் பின் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* பிறகு மஞ்சள் பூசணியை சேர்த்து ஒருமுறை வதக்கி விட வேண்டும்.

* பின்பு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து 10 நிமிடம் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

* இறுதியில் அதில் சிறிது துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான பூசணிக்காய் பொரியல் ரெடி!

இந்த பதிவின் மூலமாக சுவையான.. பூசணிக்காய் பொரியல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான.. பூசணிக்காய் பொரியல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment