சைவம்

Andhra Style Ridge Gourd Gravy In Tamil | ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஆந்திராவில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி தான் பீர்க்கங்காய் கிரேவி. இந்த கிரேவி நன்கு காரமாக சூப்பராக இருக்கும். பீர்க்கங்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. ஆகவே உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இந்த காய் மிகவும் நல்லது. மேலும் பீர்க்கங்காய் மஞ்சள் காமாலையை குணமாக்க வல்லது மற்றும் இது நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும். இப்படிப்பட்ட பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பீர்க்கங்காய் – 4 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 5 பல்

* பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* வெந்தய பவுடர் – 1/2 டீஸ்பூன்

* சோம்பு பவுடர் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* கடுகு – 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கொத்தமல்லி – சிறிது

* வரமிளகாய் – 1

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பீர்க்கங்காயின் தோலை சீவி நீக்கிக் கொண்டு, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பின் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் பூண்டுகளை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டு வதக்க வேண்டும்.

* பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பீர்க்கங்காய் நன்கு வெந்தததும், அதில் வெல்லம், சோம்பு பவுடர் மற்றும் வெந்தயப் பவுடர் சேர்த்து கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆந்திரா ஸ்டைல் பீர்க்கங்காய் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment