அசைவம்

Bread Egg Upma Recipe In Tamil | Bread Egg Upma Recipe : சுவையான… பிரட் முட்டை உப்புமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Bread Egg Upma Recipe : சுவையான… பிரட் முட்டை உப்புமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் பிரட் முட்டை உப்புமா செய்து கொடுங்கள். இந்த பிரட் முட்டை உப்புமா மாலை வேளையில் சாப்பிட ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ். குறிப்பாக இந்த உப்புமா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அதுவும் பிரட் முட்டை உப்புமாவை வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டையும் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

* பிரட் துண்டுகள் – 4

* முட்டை – 2

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* குடைமிளகாய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பின் அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அதன் பின் வாணலியில் உள்ள மசாலாவை ஒரு பக்கமாக தள்ளிவிட்டு, பின் முட்டையை சேர்த்து, அதன் மேல் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து முட்டையை நன்கு பொடிமாஸ் போன்று வதக்கிக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், பிரட் முட்டை உப்புமா தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Bread Egg Upma Recipe : சுவையான… பிரட் முட்டை உப்புமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Bread Egg Upma Recipe : சுவையான… பிரட் முட்டை உப்புமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment