சைவம்

Chettinad Idli Podi Recipe In Tamil | செட்டிநாடு இட்லி பொடி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு இட்லி பொடி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் இட்லி பொடி பிரியரா? இட்லி, தோசைக்கு இட்லி பொடி வைத்து சாப்பிட விரும்புபவரா? அதே வேளையில்

தேவையான பொருட்கள்:

* உளுத்தம் பருப்பு – 1/2 கப்

* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 10

* எள்ளு விதைகள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, எள்ளு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், செட்டிநாடு இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை நல்லெண்ணெயுடன் தேவையான போது சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

*
*
* பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகள் இரண்டையும் எப்போதும் நல்ல தரமானதாகவே பயன்படுத்த வேண்டும். அது தான் நல்ல ப்ளேவரையும், மணத்தையும் தரும்.

Image Courtesy: chitrasfoodbook

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு இட்லி பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு இட்லி பொடி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment