அசைவம்

Egg Kothu Pasta Recipe In Tamil | முட்டை கொத்து பாஸ்தா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முட்டை கொத்து பாஸ்தா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான மற்றும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபியை செய்து கொடுங்கள். அதன் பெயர் தான் முட்டை கொத்து பாஸ்தா. அதை செய்வது மிகவும் ஈஸி. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப்

* முட்டை – 2

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பூண்டு – 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து மென்மையாக வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

* முட்டையில் உள்ள நீர் ஓரளவு வற்ற ஆரம்பிக்கும் போது, அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை கொத்து பாஸ்தா தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக முட்டை கொத்து பாஸ்தா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முட்டை கொத்து பாஸ்தா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment