அசைவம்

Green Chicken Gravy Recipe In Tamil | க்ரீன் சிக்கன் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இந்த சிக்கனைக் கொண்டு பலவிதமான சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிடலாம். அதில் ஒரு அற்புதமான ரெசிபி தான் க்ரீன் சிக்கன் கிரேவி. இந்த கிரேவி நாண், சப்பாத்தி, புலாவ் அல்லது சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த சிக்கன் கிரேவியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1 கிலோ

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* தயிர் – 1/4 கப்

* கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்

* எலுமிச்சை சாறு – 3-4 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* கொத்தமல்லி – 1 கட்டு

* புதினா – 1/2 கட்டு

* பச்சை மிளகாய் – 4-5

* சின்ன வெங்காயம் – 3

* இஞ்சி – 1 1/2 இன்ச்

* பூண்டு – 7-8 பல்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தயிர், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து குறைந்தது 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, நன்கு சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* சிக்கன் நன்கு வெந்ததும், தேங்காய் பால் சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி தயார்.

இந்த பதிவின் மூலமாக க்ரீன் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி க்ரீன் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment