அசைவம்

Malabar Mutton Roast Recipe In Tamil | மலபார் மட்டன் ரோஸ்ட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தென்னிந்திய உணவுகளில் மலபார் ரெசிபிக்கள் பிரபலமானவை. அதில் ஒன்று தான் மலபார் மட்டன் ரோஸ்ட். நீங்கள் பல்வேறு வகையான மட்டன் ரெசிபிக்களை உங்கள் வீடுகளில் செய்து சுவைத்திருக்கலாம். ஆனால் மலபார் மட்டன் ரோஸ்ட் அற்புதமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 600 கிராம்

* வெங்காயம் – 1 (அரைத்தது)

* தக்காளி – 1 (அரைத்தது)

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீபூன்

* மிளகாய் தூள் – 2 டீபூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்

* கறிவேப்பிலை – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

மசாலாவிற்கு…

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* வரமிளகாய் – 3

* கறிவேப்பிலை – சிறிது

* சீரகப் பொடி – 2 டீபூன்

* வெந்தயம் – 1/2 டீபூன்

* மிளகுத் தூள் – 1/2 டீபூன்

* கரம் மசாலா – 1/4 டீபூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பிரட், குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மட்டன் துண்டுகளைப் போட்டு, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வரமிளகாய் சேர்த்து கிளற வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி, வெந்தயம், மிளகுத் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வெண்டும.

* இந்நிலையில் வேக வைத்து இறக்கியுள்ள மட்டனை மசாலாவுடன் சேர்த்து கிளறிய பின் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான மலபார் மட்டன் ரோஸ்ட் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக மலபார் மட்டன் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மலபார் மட்டன் ரோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment