சைவம்

Mutton Chicken Masala Powder Recipe In Tamil | மட்டன் சிக்கன் மசாலா பவுடர்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மட்டன் சிக்கன் மசாலா பவுடர் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பலருக்கும் சமையலுக்கு வேண்டிய பொடிகளை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். சொல்லப்போனால் கடைகளில் விற்கப்படும் பொடிகளை விட, வீட்டில் தயாரிக்கும் பொடிகள் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் அடிக்கடி மட்டன், சிக்கன் சமைத்து சாப்பிடுபவரானால், அவற்றிற்கு தேவையான மசாலா பொடியை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தினால், அசைவ ரெசிபிக்கள் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வறுக்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியல் 1:

* எண்ணெய் – 1 டீஸ்பூன்

* மல்லி – 1/2 கப்

* வரமிளகாய் – 4

* காஷ்மீரி மிளகாய் – 4

* பூண்டு – 4 பல்

வறுக்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியல் 2:

* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 3 டேபிள் ஸ்பூன்

* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

* கிராம்பு – 10

* 1/2 இன்ச் பட்டை – 4 துண்டு

* ஏலக்காய் – 5

* அன்னாசிப்பூ – 1

* பிரியாணி இலை – 1

* ஜாதிபத்திரி – 2

* கசூரி மெத்தி – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முதல் பட்டியலில் உள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் கொட்டி குளிர வைக்க வேண்டும்.

* பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் இரண்டாவது பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின்பு அனைத்து பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து குளிர வைத்து, ஒரு காற்றுப்புகாத ஜாரில் போட்டு, தேவையான போது பயன்படுத்தவும்.

குறிப்பு:

* அரைத்த மசாலா பொடியை நன்கு குளிர வைத்த பின் டப்பாவில் போடுங்கள். இல்லாவிட்டால் பொடி சீக்கிரம் பாழாகிவிடும்.

* தயாரித்த பொடியானது 2 மாதம் வரை நன்றாக இருக்கும்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக மட்டன் சிக்கன் மசாலா பவுடர் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மட்டன் சிக்கன் மசாலா பவுடர் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment