அசைவம்

Bengali Style Chicken Rezala Recipe | ரம்ஜான் ஸ்பெஷல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ரம்ஜான் பண்டிகை வரப்போகிறது. ரம்ஜான் பண்டிகை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது, பிரியாணி தான். அதோடு அந்நாளில் பல வித்தியாசமான சுவையான ரெசிபிக்களையும் சிலர் முயற்சிப்பார்கள். அப்படி நீங்களும் ரம்ஜான் பண்டிகையன்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைத்தால், பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா செய்யுங்கள். சிக்கன் ரெசலா என்பது சிக்கன் குருமா. இந்த குருமா சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* முந்திரி – 10

* கசகசா – 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* பிரியாணி இலை – 2

* கிராம்பு – 4

* ஏலக்காய் – 2

* பட்டை – 1 இன்ச்

* வரமிளகாய் – 4

* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* சிக்கன் – 1 கிலோ

* தயிர் – 1 கப்

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* குங்குமப்பூ – சிறிது (அலங்கரிப்பதற்கு)

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்து, தனியாக ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த மிக்சர் ஜாரை கழுவி விட்டு, அதில் முந்திரி, கசகசா சேர்த்து நீர் ஊற்றி நன்கு மேன்மையாக அரைத்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு சிக்கனை நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்த பாதி வெங்காய விழுது மற்றும் பாதி முந்திரி விழுதை சேர்த்து, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் எஞ்சிய வெங்காய விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

* பின்பு அத்துடன் மீதமுள்ள முந்திரி விழுதை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.

* இறுதியாக ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 25 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின்பு மூடியைத் திறந்து, அதில் சர்க்கரையை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கிளறி இறக்கி, மேலே குங்குமப்பூவைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரம்ஜான் ஸ்பெஷல்: பெங்காலி ஸ்டைல் சிக்கன் ரெசலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment