சைவம்

Bhang Thandai Recipe | ஹோலி ஸ்பெஷல்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஹோலி ஸ்பெஷல்: பாங் தண்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பாங் தண்டை ஹோலி பண்டிகையன்று வட இந்தியாவில் ஸ்பெஷலாக செய்யப்படும் ஒரு பானம். ஹோலி என்றதும் பலரது நினைவிற்கு வருவது வண்ணமயமான கலர் பொடிகள் மட்டுமின்றி, இந்த பாங் தண்டையும் தான். நீங்கள் ஹோலி அன்று தயாரிக்கப்படும் பாங் தண்டையை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?

அதை எப்படி செய்வதென்று

தேவையான பொருட்கள்:

* முழு கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்

* குங்குமப்பூ – சிறிது

* சர்க்கரை – 3/4 கப்

பாங் தண்டை மசாலாவிற்கு…

* கசகசா – 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

* பாதாம் – 1/4 கப்

* மிளகு – 1 டீஸ்பூன்

* ஏலக்காய் – 3 (பொடித்து கொள்ளவும்)

* பாங் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாங் தண்டை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாமின் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் கசகசா, சோம்பு, தோலுரித்த பாதாம், மிளகு, ஏலக்காய் விதைகள் மற்றும் பாங் பேஸ்ட் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பாங் தண்டை மசாலா, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அல்லது ஹேண்ட் பிளெண்டர் கொண்டு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாங்கை குளிர வைக்கவும். பாங் தண்டை ஓரளவு குளிர்ந்ததும், அதை ஃப்ரிட்ஜில் குறைந்தது 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். வேண்டுமானால், இதில் ஐஸ் கட்டிகளை சேர்த்தும் பரிமாறலாம். இப்போது சுவையான பாங் தண்டை தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ஹோலி ஸ்பெஷல்: பாங் தண்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஹோலி ஸ்பெஷல்: பாங் தண்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment